தேசியம்
செய்திகள்

44வது நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக திங்கள்கிழமை ஆரம்பம்!

புதிய அரசாங்கத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் திங்கள்கிழமை ஆரம்பமாகின்றது.

2021 பொது தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னர், 44வது நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக திங்கள்கிழமை ஆரம்பமாகின்றது.

அதைத் தொடர்ந்து பிரதமர் Justin Trudeauவின் சிறுபான்மை Liberal அரசாங்கத்திற்கான முன்னுரிமைகளை கொண்ட சிம்மாசன உரை செவ்வாய்கிழமை நிகழவுள்ளது.

புதிய நாடாளுமன்ற அமர்வின் போது புதிய சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

கனடாவின் அடுத்த சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை திங்களன்று மதியம் 1 மணிக்கு ஆரம்பமாகின்றது.

அதேவேளை திங்கட்கிழமை முதல், நாடாளுமன்ற வளாகம், மேல்சபை கட்டிடங்களுக்குள் நுழைய விரும்பும் அனைவரும் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என்ற  நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.
இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேல்சபை உறுப்பினர்கள் அவர்களது பணியாளர்கள் மற்றும் நிருபர்கள் இந்த இடங்களில் நுழைவதற்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

இதிலிருந்து மருத்துவ விலக்கு பெற்றவர்க்களுக்கு ஒரு குறுகிய விதிவிலக்கு வழங்கப்படுகிறது.

அனைத்து Liberal, Bloc Quebecois, NDP மற்றும் பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

ஆனாலும் Conservative கட்சியின் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்ற விபரத்தை கட்சி உறுதி செய்யவில்லை.

Related posts

Quebec முகமூடி கட்டுப்பாடுகள் 14ஆம் திகதி முடிவுக்கு வரும்

Lankathas Pathmanathan

புதிய Toronto நகர முதல்வருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

Lankathas Pathmanathan

Ontarioவில் குறைவடையும் எரிபொருளின் விலை

Leave a Comment