York பிராந்திய காவல்துறையினர் தொடர்ச்சியான விசாரணையைத் தொடர்ந்து 22 வயதான தமிழர் ஒருவர் மீது மேலும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.
Torontoவைச் சேர்ந்த 22 வயதான பாபிசன் வில்வராஜா மீது இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவாகின.
உயர்தர சொகுசு வாகனங்கள் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளைகள் தொடர்பான வாகன திருட்டுகள் குறித்த விசாரணைகளில் இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகின.
சந்தேகத்திற்குரிய வாகனமான 2017 Mercedes C43, September மாதம் 19ஆம் திகதி 2021ஆம் ஆண்டு ஏழு கொள்ளைகள் மற்றும் ஐந்து வாகன திருட்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
வில்வராஜா Newmarketடில் உள்ள நீதிமன்றத்தின், 2019 ஆம் ஆண்டில் இதே போன்ற குற்றங்களை எதிர்கொண்டார்.
November மாதம் 5ஆம் திகதி 2021ஆம் ஆண்டு, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவாகின.