தேசியம்
செய்திகள்

இலையுதிர் காலஇறுதிக்குள் மீண்டும் நாடாளுமன்றம் கூடும்: பிரதமர் Trudeau !

தனது புதிய அமைச்சரவை அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என பிரதமர் Justin Trudeau அறிவித்தார்.
இலையுதிர் காலத்தின் இறுதிக்குள் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் தெரிவித்தார்.

வாக்குறுதியளிக்கப்பட்ட அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாகவும் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற முதலாவது  பெரிய செய்தியாளர் சந்திப்பில் Trudeau கூறினார்.

அடுத்த அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆளுநர் நாயகம் May Simon உடன் செவ்வாயன்று பேசியதாகவும் பிரதமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

44ஆவது நாடாளுமன்றத்தில் ஆளும் Liberal அரசாங்கம் 159 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

இது அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்ததை விட நான்கு அதிக ஆசனங்களாகும்.

119 தொகுதிகளில் வெற்றி பெற்ற Conservative கட்சியின் ஆசனங்கள் எண்ணிக்கையில் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

Bloc Quebecois, NDP கட்சிகள் தலா ஒரு அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று முறையே 33, 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது.

பசுமை  கட்சி தேர்தலுக்கு முன்னர் இருந்தது போல் 2 ஆசனங்களுடன் புதிய நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளது.

Related posts

சூடானில் அமைதி ஏற்பட கனடா அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கும்: கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan

Ottawaவில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் காவல்துறையினரால் கைது

Lankathas Pathmanathan

Ontario மாகாண அரசின் COVID – 19 தொற்று நோய் தொடர்பான அறிக்கை

thesiyam

Leave a Comment