Amazon கனடா முழுவதும் 15,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளது. தனது தற்போதைய கனேடிய விரிவாக்கத் திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்காக இந்த இலையுதிர்காலத்தில் 15,000 புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் என திங்கட்கிழமை Amazon அறிவித்தது.
அதேவேளை தனது ஊழியர்களுக்கான ஆரம்ப ஊதியத்தை அதிகரிப்பதாகவும் Amazon அறிவித்தது. Amazon, கனடாவின ஐந்து மாகாணங்களில் 25,000 முழுநேர மற்றும் பகுதிநேர ஊழியர்களை கொண்டுள்ளது.