தேசியம்
செய்திகள்

முகமூடிகள் மேலும் இரண்டு மாகாணங்களில் கட்டாயமாகின்றது!

முகமூடிகளை கட்டாயமாக்கும் அறிவித்தல்கள் இரண்டு மாகாணங்களில் புதிதாக விடுவிக்கப்பட்டன.

COVID தொற்றின் தொடர்ச்சியான அதிகரிப்பை எதிர்கொள்ளும் முகமாக British Colombia மாகாணமும் Manitoba மாகாணமும் உட்புறங்களுக்கான முகமூடி சட்டங்களை மீண்டும் அறிவித்துள்ளன.

ஆபத்தான Delta மாறுபாடும் கணிசமான British Colombia குடியிருப்பாளர்கள் தடுப்பூசி போடாததும் முகமூடி தேவையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய நிலையை உருவாகியுள்ளதாக British Colombia மாகாண சுகாதார அதிகாரி அறிவித்தார்.

இந்த உத்தரவு புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

Manitobaவின் கட்டாய முகமூடி சட்டம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் அமுலுக்கு வரும் என மாகாண முதல்வர் Brian Pallister கூறினார்.

அதேவேளை, மாகாண ஊழியர்கள் October 31ஆம் திகதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் அல்லது வழமையான COVID சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும்  Manitoba அரசாங்கம் அறிவித்தது.

Related posts

பெரிய வியாபார நிலையங்களுக்கு செல்பவர்கள் தடுப்பூசி கடவுச்சீட்டை வைத்திருப்பது அவசியம்

Lankathas Pathmanathan

FIFA உலகக் கோப்பை தொடருக்காக அமைச்சர் Sajjan கத்தார் பயணம்

Lankathas Pathmanathan

Torontoவில் விற்பனை செய்யப்பட்ட $70 மில்லியன் Lotto Max அதிஸ்டலாப சீட்டு!

Lankathas Pathmanathan

Leave a Comment