தேசியம்
செய்திகள்

August இறுதிக்கு பின்னரும் கனேடிய இராணுவத்தினர் காபூலில் தங்கியிருப்பார்: பிரதமர் Trudeau!

இந்த மாதத்தின் இறுதிக்கு பின்னர் கனேடிய இராணுவத்தினர் காபூலில் தங்க தயாராக இருப்பதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற G7 மெய்நிகர் உச்சி மாநாட்டின் பின்னர் Trudeau இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

G7 நாடுகளின் தலைவர்கள், ஆப்கானிஸ்தானில் தோன்றியுள்ள நெருக்கடி மற்றும் தலிபான்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக மீண்டும் மாறியுள்ளது குறித்து விவாதிக்க கூடினர்.

ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பதற்கான அமெரிக்காவின் August 31 ஆம் திகதி காலக்கெடுவின் பின்னரும் கனடா தனது இராணுவத்தினரை ஆப்கானிஸ்தானில் வைத்திருக்க தயாராக இருப்பதாக பிரதமர் இந்த மாநாட்டின் பின்னர் கூறினார்.

தலிபான்களின் பழிவாங்கலை எதிர்கொள்ளும் மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றுவதில் பங்கேற்கும் ஒரு dozen நட்பு நாடுகளில் கனடாவும் ஒன்றாகும்.

கனேடிய இராணுவ விமானமொன்று திங்கட்கிழமை காபூலில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆப்கானியர்களுடன் புறப்பட்டது என கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் Harjit Sajjan தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை கனடா ஆப்கானிஸ்தானில் இருந்து 1,100க்கும் அதிகமான மக்களை வெளியேற்றியுள்ளதாக கனேடிய குடிவரவு அமைச்சர் Marco Mendicino தெரிவித்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடாளுமன்றத்திற்கு தேர்வான Liberals, NDP, Bloc Quebecois உறுப்பினர்கள் தடுப்பூசி போட வேண்டும்: கட்சி தலைமை வலியுறுத்தல்! 

Gaya Raja

மீண்டும் திங்களன்று நான்காயிரத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு!  

Gaya Raja

September மாதத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்:Ontario தலைமை மருத்துவர் அறிவுறுத்தல்!

Gaya Raja

Leave a Comment