தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

Liberal அரசாங்கத்தின் அணுகுமுறை வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பை தூண்டியது: O’Toole குற்றச் சாட்டு!

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவீனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் Liberal கட்சி மீது முன்வைக்கப்படுகின்றது.

கனடாவின் முக்கிய பணவீக்கம் July மாதத்தில் 3.7 சதவீதமாக உயர்ந்தது.

இது 2011ஆம் ஆண்டு May மாதத்தின் பின்னரான ஆண்டு அதிகரிப்பு என கனடாவின் புள்ளிவிவரத் திணைக்களம் கூறியது.

பொருளாதாரத்திற்கான Liberal அரசாங்கத்தின் அணுகுமுறை இந்த அதிகரிப்புக்கு தூண்டியது என Quebec நகரில் செய்தியாளர்களிடம் பேசிய Conservative தலைவர் Erin O’Toole குற்றம் சாட்டினார்.

NDP தலைவர் Jagmeet Singh மீதும் O’Toole இந்த விடயத்தில் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனை எதிர்கொள்ள Conservative அரசாங்கம் இந்த December மாதம் வாங்கும் பொருட்களுக்கு GST வரியை தள்ளுபடி செய்வதாக தனது கட்சியின் வாக்குறுதி O’Toole சுட்டிக் காட்டினார்.

Related posts

பாதியாகக் குறையும் கனடாவின் அடுத்த மாத Pfizer தடுப்பூசி ஏற்றுமதி

Lankathas Pathmanathan

West Edmonton வணிக வளாக துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

Lankathas Pathmanathan

New Brunswick மாகாண அமைச்சரவையில் மாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment