தேசியம்
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறைகளை அரசாங்கம் கண்டிக்கிறது: பிரதமர் Trudeau!

ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் வரவிருக்கும் வாரங்களில் கனடாவில் மீள்குடியேற்றப்படுவார்கள் என பிரதமர் Justin Trudeau உறுதியளித்தார்.

ஆப்கானிஸ்தானில் உருவாகியுள்ள அசாதாரணமான சூழ்நிலை கனேடிய பொது தேர்தல் பிரச்சாரத்தில் மைய விடயமாக அமைந்தது. பிரதமரின் உறுதிமொழி இன்றைய நிலையில் போதுமான நடவடிக்கை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டனர்.

தேர்தல் காலத்தில் பிரதமராக Trudeau இருக்கும் நிலையில் திங்கட்கிழமை காலை ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நிலைமை குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறைகளை அரசாங்கம் உறுதியாகக் கண்டிக்கிறது என தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் Trudeau கூறினார்.

அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட்ட நாடுகளுடனும் சர்வதேச உதவி அமைப்புகளுடன் இணைந்து கனடா
செயல்படுவதாகவும் பிரதமர் கூறினார். 20,000 ஆப்கானியர்களை கனடாவுக்கு மீள்குடியேற்றுவதாக உறுதியளித்த நிலையில் இந்தப் பணிகள் தொடர்வதாகவும் அவர் கூறினார். திங்கட்கிழமை வரை குறைந்தது 807 ஆப்கானியர்கள் வெளியேற்றப்பட்டனர் என கூறிய Trudeau இவர்களில் 500 பேர் கனடாவுக்கு வந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Related posts

Northwest பிரதேசங்கள் மீண்டும் அறிமுகமாகும் முககவச கட்டுப்பாடுகள்!

Gaya Raja

அவசர காலச் சட்டத்தை செயல்படுத்தியதற்கான மத்திய அரசின் முடிவு சரியானது!

Lankathas Pathmanathan

Quebec தொழிலதிபரின் மரணம் குறித்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment