அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என Manitobaவின் முதல்வர் அறிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற Progressive Conservative கட்சியின் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, முதல்வர் Brian Pallister இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
ஒரு புதிய தலைவரும் முதல்வரும் எங்கள் மாகாணத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது என நம்புவதாக Pallister கூறினார்.
அதன்படி, Manitobaவின் Progressive Conservative கட்சியின் புதிய தலைவர் அடுத்த தேர்தலுக்கு கட்சியை வழிநடத்துவார் எனவும் Pallister கூறினார்.
Pallister 2012 இல் Progressive Conservative கட்சித் தலைமையை வென்றார்.
பின்னர் 2016இல் Manitobaவின் 22வது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 2019இல் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.