தேசியம்
செய்திகள்

2.3 மில்லியன் தடுப்பூசி இந்த வாரம் கனடாவை வந்தடைகிறது!!!

கனடா இந்த வாரம் மேலதிகமாக 2.3 மில்லியன் Pfizer தடுப்பூசிகளைப் பெறவுள்ளது.

கனடிய சுகாதார அதிகாரிகள் COVID தொற்றின் நான்காவது அலையை எதிர்கொள்ள காத்திருக்கும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
மத்திய அரசாங்கம் ஏற்கனவே 66 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை பெற்றுள்ளது. இது கனடாவில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் வழங்குவதற்கு போதுமான தடுப்பூசிகளின் எண்ணிக்கையாகும்.
கனடாவின் கடந்த ஏழு நாள் தொற்றின் சராசரி 640ஆகப் பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வரை 80.3 சதவீதமான தகுதியுள்ள கனடியர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியையும், 63.7 சதவீதமானவர்கள் முழுமையாகவும் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

Related posts

Ontario வாசிகள் முகக் கவசங்களை அணிய வேண்டும்: முதல்வர் Doug Ford

Lankathas Pathmanathan

British Colombiaவில் வெள்ளம் காரணமாக 500 கால்நடைகள் மரணம்

Lankathas Pathmanathan

கனடாவில் மீண்டும் தோன்றும் காட்டுத்தீ அபாயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment