தேசியம்
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி போட்ட அமெரிக்கர்களை August நடுப்பகுதியில் கனடாவுக்கு அனுமதிக்கலாம்: பிரதமர் Trudeau

முழுமையாக தடுப்பூசி போட்ட அமெரிக்கர்களை August நடுப்பகுதியில் கனடாவுக்கு அனுமதிக்கலாம் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

August நடுப்பகுதியில் அமெரிக்க குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களை மீண்டும் கனடாவுக்குள் அனுமதிக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளதாக பிரதமர் Trudeau கூறினார்.

அதேபோல் தற்போதைய தடுப்பூசி விகிதம் தொடர்ந்தால், உலகெங்கிலும் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் September ஆரம்பத்தில் கனடாவுக்கு வர ஆரம்பிக்கலாம் எனவும் Trudeau கூறினார்.

வியாழக்கிழமை மாகாண முதல்வர்களுடனான வாராந்த தொலைபேசி உரையாடலின் போது பிரதமர் இந்த கருத்தை தெரிவித்தார்.

COVID தொற்றுக்கான பதில் நடவடிக்கை குறித்து விவாதிக்க மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களின் முதல்வர்களுடனான சந்திப்பு குறித்த, பிரதமர் அலுவலகத்தின் செய்தி குறிப்பில் இந்த தகவல் வெளியாகியிருந்தது.

தடுப்பூசி விகிதத்தில் G20 நாடுகளில் கனடா முன்னிலை வகிக்கிறது என Trudeau பெருமிதம் கொண்டார். தகுதியான கனேடியர்களில் 80 சதவீதம் பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். பாதிக்கும் மேற்பட்டவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் எனவும் Trudeau கூறினார்.

Related posts

கனடிய விமான நிலையங்களில் COVID கட்டுப்பாடுகள் இடை நிறுத்தம்

கனேடியர்கள் கோடை காலத்தில் என்ன கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளலாம்?

Gaya Raja

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 7ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment