பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இந்த முதல் வார இறுதியில் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பை கனேடிய எல்லை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த திங்கட்கிழமை முதல் கனடாவிற்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக கனடா எல்லை சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அன்று முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், ஏற்கனவே எல்லை கடக்க அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலை இந்த வார இறுதியில் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு தொடர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.