தேசியம்
செய்திகள்

கனேடிய முதற் குடிகளின் தேசிய சபையின் தலைவராக முதல் முறையாக பெண் ஒருவர் தெரிவு!

கனேடிய முதற் குடிகளின் தேசிய சபையின் தலைவராக Roseanne  Archibald   தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கனேடிய வரலாற்றில் பெண் ஒருவர் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

கனடாவின்  ஆளுநர் நாயகம் பதிவிக்கு முதற்குடி பெண் ஒருவர் இந்த வாரம் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 100 நாட்களில், முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த விரும்புவதாக Archilbald கூறினார்.

முன்னாள் வதிவிடப் பாடசாலைகளில் நில குறிப்பற்ற புதைகுழிகள், காணாமல் போன முதற்குடி பெண்கள் மற்றும் சிறுமிகள் போன்றவற்றை அவர் தான் கவனம் செலுத்தவுள்ள விடயங்களாக குறிப்பிட்டார்.

Related posts

Albertaவில் காணாமல் போன சிறுமி மரணம்

Lankathas Pathmanathan

கடுமையான பனிப்புயல்: விமானங்கள் இரத்து. நெடுஞ்சாலைகள் மூடல்.

Lankathas Pathmanathan

வரி காலக் கெடுவை நீட்டிக்க திட்டம் எதுவும் இல்லை: CRA

Lankathas Pathmanathan

Leave a Comment