திங்கட்கிழமை கனடாவில் மொத்தம் 500க்கும் குறைவான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
திங்கட்கிழமை 439 தொற்றுக்களை நாடளாவிய ரீதியில் சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். Ontarioவில் மாத்திரம் திங்கட்கிழமை 200க்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகின.
ஏனைய அனைத்து மாகாணங்களிலும் தலா 100க்கும் குறைவான தொற்றுகள் பதிவாகின.
Ontarioவில் 210 தொற்றுக்களும் 3 மரணங்களும் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டன. கடந்த September மாத நடுப்பகுதியின் பின்னர் திங்கட்கிழமை மிகக் குறைந்த எண்ணிக்கையில் தொற்றுக்களை Ontario பதிவு செய்தது.
Quebecகில் 76 தொற்றுக்கள் பதிவான போதிலும் மரணங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.