கனடாவின் குடியிருப்பு பாடசாலைகளின் சோகத்தில் RCMP தவிர்க்க முடியாத பங்கு வகித்தது என பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார் .
பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நிலைக்குழுவின் கூட்டத்தில் புதன்கிழமை பிற்பகல் அமைச்சர் Bill Blair இந்த கருத்துக்களை தெரிவித்தார். இந்த விடயத்தில் RCMPயின் நல்லிணக்கத்திற்கான முயற்சி குறித்து படை ஆணையர் Brenda Luckiஉடன் கணிசமான நேரத்தை செலவிட்டுள்ளதாக Blair கூறினார்
இந்த விடயத்தில் அரசாங்கத்தின் பங்கையும் அமைச்சர் ஒப்புக் கொண்டார்.