தேசியம்
செய்திகள்

அவசர சிகிச்சைப் பிரிவை மூட வேண்டும் என்பது சவாலான முடிவாகும்: Ontario சுகாதார அமைச்சர்

Ontario மாகாணத்தில் அதிகரித்து வரும் மருத்துவமனை அவசர அறை, தீவிர சிகிச்சை பிரிவு மூடல்கள் ஏற்கத்தக்கதா என்பது குறித்து கருத்துத் தெரிவிக்க சுகாதார அமைச்சர் மறுத்துள்ளார்.

அவசர சிகிச்சைப் பிரிவை மூட வேண்டும் என்பது எப்போதும் மிகவும் சவாலான முடிவாகும் என சுகாதார அமைச்சர் Sylvia Jones செவ்வாய்க்கிழமை (02) கூறினார்.

எவ்வாறாயினும், Ontario சுகாதார அமைச்சு உள்ளூர் மருத்துவமனைகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அமைச்சர் கூறினார்.

இதற்கிடையில், மாகாணம் முழுவதும் உள்ள ஊழியர் பற்றாக்குறையால் சுமார் 25 மருத்துவமனைகள் நீண்ட வார இறுதியில் மாற்றங்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக Ontario தாதியர் சங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

Related posts

British Colombiaவில் அவசர நிலை பிரகடனம்: முதல்வர் தகவல்!

Lankathas Pathmanathan

மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள்!

Gaya Raja

RCMP இடைக்கால ஆணையராக Mike Duheme நியமனம்

Lankathas Pathmanathan

Leave a Comment