Ontarioவில் COVID தொற்றால் நிகழ்ந்த மரணங்கள் வியாழக்கிழமையுடன் 8 ஆயிரத்தை தாண்டியது.
வியாழக்கிழமை Ontarioவில் 41 மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் Ontarioவில் மொத்த மரணங்கள் 8,029 ஆக பதிவானது. வியாழக்கிழமை சுகாதார அதிகாரிகள் 3,871 புதிய தொற்றுக்களையும் அறிவித்தனர். Ontarioவில் 3,480 தொற்றுக்கள் புதன்கிழமையும் 3,265 தொற்றுக்கள் செவ்வாய்க்கிழமையும் பதிவாகியிருந்தன.
வியாழக்கிழமை நிலவரப்படி, தொற்றுடன் 2,248 பேர் Ontario மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 825 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 579 பேர் ventilatorரின் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.