தேசியம்
செய்திகள்

தொற்றின் பரவல் அதிகமாக உள்ள நாடுகளின் விமானங்களை கனடா நிறுத்த வேண்டும் – தொடரும் கோரிக்கைகள்!

COVID தொற்றின் பரவல் அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து வரும்  விமானங்களை கனடா நிறுத்த வேண்டும், என கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக வலியுறுத்தியுள்ளனர்.

தொற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளிலிருந்து அத்தியாவசியமற்ற பயணிகளுடன் கனடா வரும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில்  ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களில் கனடாவிற்கு 112 சர்வதேச விமானங்கள் குறைந்தது ஒரு COVID தொற்றாளருடன் வந்ததாக Health கனடா தரவு சுட்டிக் காட்டுகிறது. இதில் இந்தியாவிலிருந்து 32 விமானங்களும், அமெரிக்காவிலிருந்து 20 விமானங்களும், பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து தலா 10 விமானங்களும் அடங்கும்.

தொற்றின் பரவல் அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்களை தடை செய்யுமாறு Ontario, Quebec ஆகிய மாகாண அரசாங்கங்கள்  மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றது.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

உக்ரைனுக்கு நான்கு டாங்கிகளை அனுப்பும் கனடா

Lankathas Pathmanathan

இலக்கிய நோபல் பரிசு பெற்ற Alice Munro காலமானார்

Lankathas Pathmanathan

Leave a Comment