December 21, 2024
தேசியம்
செய்திகள்

மீண்டும் முடங்குகிறது Ontario – அறிவிக்கப்பட்டது அவசர கால நிலை

Ontario மாகாணம் அவசர கால நிலையொன்றை அறிவித்துள்ளது. அதிகரித்துவரும் COVID தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த அறிவித்தல்வெளியானது. அவசர கால நிலையை புதன்கிழமை அறிவித்த முதல்வர் Doug Ford, வீட்டிலிருக்கும் கட்டுப்பாட்டு நடைமுறையையும் அறிவித்தார்.

வியாழக்கிழமை நள்ளிரவு 12:01 முதல் அமுலுக்கு வரும் இந்த அவசரகால நிலை 28 நாட்கள் நீடிக்கவுள்ளது. Ontarioவில் COVID தொற்று காரணமாக அமுல்படுத்தப்படும் மூன்றாவது அவசரகால நிலை பிரகடனம் இதுவாகும். இந்தக் கட்டுப்பாடுகளின் கீழ் அவசியமற்ற விற்பனை நிலையங்கள் அனைத்து மூடப்படவுள்ளன. பல்பொருள் அங்காடிகளிலும் அவசியமான பொருட்கள் மாத்திரமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படவுள்ளது.

இந்த மாகாண ரீதியிலான முடக்க காலத்தில் பாடசாலைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு நிலையச் செயற்பாடுகள் பாதிக்கப்பட மாட்டாது. ஆனாலும் Ontarioவின் மூன்று சுகாதார பிரிவுகளில் ஏற்கனவே பாடசாலைகள் நேரடி கல்விக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் முகமூடி கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும்!.

COVID பரிசோதனையில் Ontarioவில் விரைவில் வரவுள்ள மாற்றங்கள்

Lankathas Pathmanathan

அவசரமாக கூடும் Justin Trudeau அமைச்சரவை?

Lankathas Pathmanathan

Leave a Comment