தேசியம்
செய்திகள்

இலங்கை அரசின் தடை பட்டியலில் 2 கனேடிய தமிழ் அமைப்புகளும் 47 கனேடிய தமிழர்களும்!

இரண்டு தமிழ் அமைப்புகளையும், கனடாவில் வசிக்கும் 47 தமிழர்களையும் உள்ளடக்கிய தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலொன்றை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது

அமைப்புக்களையும் தனி நபர்களையும் அடக்கிய இலங்கை அரசாங்கத்தின் இந்த வர்த்தமானி February மாதம் 25ஆம் திகதி திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கனடிய தமிழர் பேரவை (CTC), கனடிய தமிழர் தேசிய அவை (NCCT) ஆகிய கனடிய தமிழர் அமைப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதேவேளை Ontario, Quebec மாகாணங்களில் வசிக்கும் 47 தமிழர்களின் விபரங்களும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகள், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் ஆகியன அமைப்புக்களும் தனி நபர்களும் பட்டியலில் இணைக்கப்பட்டுளமைக்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த வர்த்தமானி அறிவித்தல் தனக்கு திகைப்பை ஏற்படுத்தியுள்ளதாக Scarborough-Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Related posts

 November மாதத்தில் வீடு விற்பனை குறைந்தது

Lankathas Pathmanathan

Brampton நகரில் பட்டாசுகளின் விற்பனையும் பயன்பாடும் தடை

Lankathas Pathmanathan

OPP அதிகாரியின் மரணம் குறித்த குற்றச்சாட்டுகள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment