தேசியம்
செய்திகள்

இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக போராட்டம்

கனடிய தலைநகரம் Ottawaவில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இன்று தமிழர்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று (புதன்)கனடிய நாடாளுமன்றம் நோக்கிய தமிழர்களின் வாகனப் பேரணியில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாகவும் ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர். Torontoவில் இருந்தும், Montrealலில் இருந்தும் இன்று காலை ஆரம்பமான வாகனப் பேரணி மாலை Ottawaவை சென்றடைந்தது.

இன்றைய வாகன பேரணியில் 100 வாகனங்கள் வரை Toronto, Montreal, Ottawa நகரங்களில் இருந்து பங்கேற்றன. இலங்கை அரசை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கனடிய அரசிடம் கோரும் வகையில் இந்த வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய வாகன பேரணியின் இறுதியில் மகஜர் ஒன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியிடம் கையளிக்கப்பட்டது.

Related posts

February மாதத்தில் பணவீக்கம் குறைந்தது

Lankathas Pathmanathan

Kelowna நகர முன்னாள் முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

தடுப்பூசி போடாதவர்கள் நடத்தப்படும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது: Alberta முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment