December 12, 2024
தேசியம்
செய்திகள்

இன்று Ontario மாகாணத்தின் வரவு செலவுத் திட்டம்

COVID தொற்றை எதிர்கொள்ளும் தமது அடுத்த கட்டத் திட்டத்தை Ontario மாகாண அரசாங்கம் இன்று (05) வெளியிடவுள்ளது. இன்று Ontario மாகாணத்தின் வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் Rod Phillips இன்றைய வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்கவுள்ளார்.

தொற்றின் பின்னரான Ontarioவின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும். இதில் தொற்றை எதிர்கொள்ளும் தமது அடுத்த கட்டத் திட்டத்தை மாகாண அரசாங்கம் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொற்றின் காரணமாக Progressive Conservative அரசாங்கம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு முழுமையான வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கவில்லை. அதற்கு பதிலாக March மாதத்தில் ஒரு நிதி மேம்படுத்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தொற்று நிவாரணத்திற்காக 30 பில்லியன் டொலர் அடங்கியிருந்தது. Ontario மாகாணம் ஆரம்பத்தில் 20.5 பில்லியன் டொலர் பற்றாக்குறையை முன்னறிவித்தது. பின்னர் கூடுதல் செலவினங்கள் காரணமாக அது 38.5 பில்லியன் டொலராக உயர்த்தப்பட்டது.

Related posts

COVID தளர்வு நடவடிக்கைகளை பிற்போடும் Alberta!

Gaya Raja

Toronto தலைமை மருத்துவர் விரைவில் பதவி விலகல்?

Lankathas Pathmanathan

சமூக ஊடக தளங்களுக்கு எதிராக மேலும் ஐந்து Ontario பாடசாலை வாரியங்கள் வழக்கு

Lankathas Pathmanathan

Leave a Comment