February 21, 2025
தேசியம்
செய்திகள்

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் Jim Karygiannis!

தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர் Jim Karygiannis அரசியலில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.

2018 நகராட்சித் தேர்தலில் பிரச்சார செலவு மீறல் தொடர்பாக வியாழக்கிழமை மூன்றாவது முறையாக பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார் கடந்த June மாதம் Ontario மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு பதிலளிக்கும் விதமாக Karygiannis தாக்கல் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்ததாக கனடாவின் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது.

இந்த நிலையில் அரசியலில் இருந்து விலகுவதான தனது அறிவித்தலை தனது தனிப்பட்ட இணையதளத்தில் ஒரு அறிக்கையாக Karygiannis வெளியிட்டார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், Toronto நகரசபை உறுப்பினராகவும் 32 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் அரசியலை விட்டு வெளியேறுவதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Related posts

தமிழ் பெண் கொலை குற்றச்சாட்டு விசாரணையை எதிர்கொள்ளும் கணவன்

Lankathas Pathmanathan

ஹமாசின் தாக்குதலில் காணாமல் போன இறுதி கனடியர் மரணம்

Lankathas Pathmanathan

Ontarioவில் கோவிட் காரணமாக பதிவான 10 வயதுக்குட்பட்ட முதலாவது மரணம்!

Gaya Raja

Leave a Comment