December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 25ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

நாடு முழுவதும் கனேடியர்களும், சிறு வணிக நிறுவனங்களும் கோவிட்-19 இன் பாதிப்புக்களை எதிர் கொள்வதால், வேலை வாய்ப்புகளையும், வணிக நிறுவனங்களையும் பாதுகாப்பதற்குக் கனேடிய அரசு மாகாணங்களுடனும், பிராந்தியங்களுடனும் இணைந்து செயற்படுவதுடன், சிறு வணிக வாடகைதாரர்கள் நெருக்கடியான இந்தக் கால கட்டத்தைக் கடப்பதற்குத் தேவையான உதவியைச் சொத்துக்களின் உரிமையாளர்கள் வழங்குவதற்கும் ஆதரவளிக்கிறது.

பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, சிறு வணிக நிறுவனங்களுக்கான கனடா அவசர வணிக வாடகை உதவித் (Canada Emergency Commercial Rent Assistance (CECRA) திட்ட விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுவதாக இன்று அறிவித்தார்.

இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கும் காலத்தில் சொத்துக்களின் உரிமையாளர்கள் ஏப்ரல், மே (மாதங்களுக்கும் பின்னோக்கிச் செல்லுபடியாகும்) மற்றும் ஜூன் ஆகிய மாதங்களுக்கான அவர்களது சிறு வணிக வாடகை தாரர்களின் வாடகையை ஆகக் குறைந்தது 75 சத வீதத்தால் குறைப்பார்கள். CECRA வாடகையின் 50 சதவீதத்தையும், வாடகை தாரர்கள் 25 சத வீதத்தையும் செலுத்தும் அதே வேளை, சொத்துக்களின் உரிமையாளர்கள் வாடகையின் ஆகக் குறைந்தது 25 சத வீதத்தைத் தள்ளுபடி செய்வார்கள்.

சொத்துக்களின் உரிமையாளர்களின் வெற்றி வாடகைதாரர்கள் வெற்றிகரமாக இயங்குவதிலேயே தங்கியிருப்பதால், சொத்துக்களின் உரிமையாளர்கள் CECRA விற்கு விண்ணப்பிப்பது நிதி அடிப்படையில் அர்த்தமுள்ளதாக அமையும். வாடகைதாரர் ஒருவர் வங்குறோத்து நிலையைப் பிரகடனம் செய்து அதன் காரணமாக வெளியேற்றப்பட்டால் சொத்தின் உரிமையாளர் வாடகை வருமானம் எதனையும் பெறமாட்டாரென்பதுடன், புதிய வாடகைதாரர்களைத் தேடும் வேளையில் மேலதிக செலவினத்தையும் எதிர்கொள்வார். இந்தத் திட்டத்தில் சொத்துக்களின் உரிமையாளர்கள் தொடர்ந்து வருமானத்தைப் பெறுவதுடன், சிறு வணிக வாடகைதாரர்கள் மீண்டெழுந்து, உலகத் தொற்று நோயின் பின்னர் செயற்படுவதற்குத் தேவையான ஆதரவையும் பெறுவார்கள்.

நிதி நெருக்கடியை எதிர் கொள்ளும் சிறு வணிக நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியமான உதவியை வழங்கிக் கனேடியர்கள் தொடர்ந்து சம்பளங்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காகக் கனேடிய அரசு அறிவித்துள்ள மற்றொரு திட்டமாக CECRA விளங்குகிறது.

Updated Emergency Measures by the Canadian Federal Government on May 25th

Canadian families and small businesses across the country are feeling the impacts of COVID-19. That’s why the Government of Canada is working with provinces and territories to protect jobs and businesses, and give property owners support so they can help small business tenants make it through these difficult times.

The Prime Minister, Justin Trudeau, today announced that applications are now being accepted for Canada Emergency Commercial Rent Assistance (CECRA) for small businesses.

Over the course of the program, property owners will reduce rent by at least 75 per cent for the months of April and May (retroactive), and June, for their small business tenants. CECRA will cover 50 per cent of the rent, with the tenant paying up to 25 per cent and the property owner forgiving at least 25 per cent.

Applying for CECRA makes financial sense for property owners, as their success depends on the success of their tenants. If a tenant declares bankruptcy and is evicted, the property owner receives zero rental income and faces additional costs while they search for new tenants. With this program, property owners will continue to receive income, and small business tenants will receive the help they need to recover and come back after the pandemic.

CECRA is another measure announced by the Government of Canada to provide important relief for small businesses experiencing financial hardship, and help keep Canadians on the payroll.

Related posts

எதிர்வரும் 7 ஆம் திகதி மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan

Metro Vancouver பகுதியில் குறைந்தது 134 திடீர் மரணங்கள்!!

Gaya Raja

நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு COVID Booster தடுப்பூசிகள் பரிந்துரை

Gaya Raja

Leave a Comment