தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 22ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

கனேடியர்கள் கடந்த சில மாதங்களாக வீடுகளில் தங்கியிருந்தும், இடைவெளியைப் பேணியும், பொதுச் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின் பற்றியும் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறார்கள். கனேடியர்கள் சில செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கு மென்பதே இதன் அர்த்தம்.

மாகாணங்களும், பிராந்தியங்களும் அவற்றின் பொருளாதார செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க முற்படும் வேளையில் அவற்றுக்கு உதவியான சமஷ்டி அரசின் திட்டம் ஒன்றைப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று அறிவித்தார். கோவிட்-19 இன் பரவல் வேகத்தைக் குறைக்கும் விடயத்தில் முன்னேற்றமான போக்குகள் அவதானிக்கப்பட்டாலும், அது தற்போதும் பாரதூரமான ஒரு சுகாதார அச்சுறுத்தலாக விளங்குகிறது. இது வரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாதுகாப்பதற்கு அவதானத்துடன் செயற்படுவதும், விஞ்ஞான அறிவுறுத்தல்களைப் பின் பற்றுவதும் முக்கியமானது. பொருளாதார செயற்பாடுகளை வெற்றிகரமாக மீள ஆரம்பிக்கும் திட்டத்தின் மூன்று அம்சங்களாவன:

(1) வைரஸ் தொற்று ஏற்படுவோரை விரைவாக அடையாளம் கண்டு அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு பரிசோதனைகளின் அளவை அதிகரித்தல்: பரிசோதனைகளின் அளவை அதிகரிப்பதற்குச் சமஷ்டி அரசு இராசாயனப் பதார்த்தங்களையும் மாதிரிகளைப் பெறுவதற்கான பஞ்சு சுற்றிய குச்சிகளையும் (swab) கொள்வனவு செய்வது போன்ற நடவடிக்கைகளின் மூலம் மாகாணங்களுக்கும், பிராந்தியங்களுக்கும் உதவியளிக்கும். சில மாகாணங்களிடம் அவற்றின் தற்போதைய தேவைகளுக்குப் போதுமான வல்லமை இருந்தாலும், கனேடியர்களை ப்பாதுகாப்பதற்கும், எதிர் கால நோய்ப் பரவலைத் தடுப்பதற்கும் பரிசோதனைகளைக் கணிசமாக அதிகரிப்பதற்குச் சமஷ்டி அரசு இணைந்து செயற்படும்.

(2) வைரஸ் தொற்றியோருடன் தொடர்பில் இருந்தவர்களைத் தேடிக் கண்டறியும் (தொடர்புத் தடமறிதல் – contact tracing) வல்லமையை வேகப்படுத்தல்: புதிதாக நோயுற்றோரைக் கண்டு பிடித்துத் தனிமைப்படுத்திய பின்னர், வைரஸ் தொற்றக் கூடிய நிலையை எதிர் கொண்டிருக்கக் கூடிய அனைவரையும் தொடர்பு கொண்டு அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு சுய கண்காணிப்பை மேற் கொள்வதையும், அல்லது பரிசோதனை செய்து கொள்வதையும் உறுதிப்படுத்துவது முக்கியமானது. மாகாணங்களும். பிராந்தியங்களும் பரிசோதனைகளையும், தொடர்பில் இருந்தவர்களைத் தேடிக் கண்டு பிடிப்பதையும் வெவ்வேறு வகையாகக் கையாண்டாலும், வாரத்தில் ஏழு நாட்களும், தொடர்பு பட்டிருந்தவர்களைக் கண்டறியும் 3,600 அழைப்புக்களை நாளாந்தம் மேற் கொள்ளக் கூடியவாறு சமஷ்டி அரச பணியாளர்களுக்குச் சமஷ்டி அரசு பயிற்சி வழங்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக, நாளொன்றுக்கு 20,000 வரையான அழைப்புக்களை மேற் கொள்ளக்கூடிய செவ்வியாளர்களை Statistics Canada கொண்டுள்ளது. தொடர்புபட்டிருந்தவர்களைத் தேடிக் கண்டறிவதை அதிகரிப்பதற்கு அல்லது நிலவும் தாமதத்தை நீக்குவதற்கு உதவி தேவைப்பட்டால் மாகாணங்களும் பிராந்தியங்களும் சமஷ்டி அரசின் இந்த வளங்களைப் பயன்படுத்தலாம். சமஷ்டி அரசின் வளங்கள், அழைப்புக்களை மேற் கொள்வதற்காக ஏற்கனவே ஒன்றாரியோ மாகாண அரசால் பயன்படுத்தப்படுகின்றன.

(3) திரட்டப்படும் தரவுகளை மாகாணங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளுதல்: இது, வைரஸ் பரவலை அவதானிப்பதற்கும், அதற்கான பதில் நடவடிக்கைகளைப் பொறுப்புள்ள வகையில் எடுப்பதற்கும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் உதவும்.

கனடா பாரிய நாடாக விளங்குவதாலும், உலகத் தொற்று நோயால் சில பிராந்தியங்கள் ஏனையவற்றை விட மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாலும், கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் திட்டங்கள் இடத்திற்கிடம் வேறுபடும். இந்த நெருக்கடியின் ஆரம்பத்தில் இருந்தே கனேடியர்களைப் பாதுகாத்தல் என்ற ஒரு பொது இலக்கை நோக்கியே அனைத்து மட்ட அரசுகளும் செயற்பட்டு வருகின்றன. பரிசோதனைகள், தொடர்புபட்டவர்களைத் தேடிக் கண்டறிதல், தரவுகளைத் திரட்டுதல், என்பன தொடர்பான கூட்டு நடவடிக்கையின் அடுத்த கட்டத்திற்கு ஆதரவளிக்கவும், உதவியளிக்கவும், நிதி வழங்கவும் சமஷ்டி அரசு முழுமையாக உறுதி பூண்டுள்ளது.

Updated Emergency Measures by the Canadian Federal Government on May 22nd

Over the past few months, Canadians have been doing a great job of staying at home, maintaining physical distancing, and listening to public health advice. And that means all Canadians can restart some activities.

The Prime Minister, Justin Trudeau, today announced a federal support plan to help provinces and territories as they look to reopen the economy. Although some positive trends have been noticed in the slowing of the spread of COVID-19, it still remains a serious health threat. The need to proceed with caution and keep listening to science is important so as not to risk losing the progress made.

The three-point plan to help in the successful reopening of the economy will consist of:

(I) Scaling up of testing capacity to quickly identify new cases, and isolate them: The federal government will work with provinces and territories to expand testing by procuring things like reagents and swabs. While some provinces have the capacity to meet their existing needs, the federal government will collaborate to ramp up testing, to protect Canadians and effectively manage future outbreaks.

(II) Accelerating ability to do contact tracing: After confirming and isolating new cases, there is a need to get in touch with everyone who may have been exposed to the virus and make sure they take measures to quarantine and monitor themselves for symptoms or get tested.While provinces and territories are managing testing and contact tracing differently, the federal government has trained federal employees who can make 3,600 contact tracing calls a day, 7 days a week. Statistics Canada also has an additional 1,700 interviewers who can make up to 20,000 calls a day. These federal resources are available to assist provinces and territories with any surges or backlogs or challenges in contact tracing. Federal government resources are already utilized by the Province of Ontario to help make calls.

(III) Sharing of data collected across jurisdictions between provinces and territories: This will help track the spread of the virus, adapt the response accordingly, and save lives. As Canada is a vast country and some regions have been hit harder than others by the pandemic plans to relax restrictions will vary from one jurisdiction to another. Since the beginning of this crisis, all jurisdictions have been working toward one common goal: to protect Canadians. The next phase of the collaborative efforts on testing, contact tracing, and data collection, will have the full commitment of the federal government to support, facilitate, and fund this important work.

Related posts

காட்டுத்தீ காரணமாக மூன்று மாகாணங்களில் வெளியேற்ற உத்தரவு

Lankathas Pathmanathan

Torontoவில் எட்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

Lankathas Pathmanathan

கனடிய வீட்டின் சராசரி விலை 20 சதவீதம் குறைவு

Lankathas Pathmanathan

Leave a Comment