December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 30ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இன்று (திங்கள்) பின்வரும் விடயங்களை அறிவித்தார்:

கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு 75 சதவீதம் வரையான சம்பள மானியம் வழங்கப்படுமெனக் கனடிய அரசு மார்ச் 27 ஆந் திகதி அறிவித்தது. கனடா அவசர சம்பள மானியம் (Canada Emergency Wage Subsidy) என்ற இந்த மானியதைப் பெறுவதற்கான தகுதி குறித்த மேலதிக தகவல்களைப் பிரதமர் இன்று வெளியிட்டார்:

  • இதற்குத் தகுதி பெறுவதற்கு வணிக வருமானம் கோவிட்-19 காரணமாக ஆகக் குறைந்தது 30 சத வீதத்தால் குறைவடைந்திருக்க வேண்டும்.
  • நிறுவனங்கள் இந்த மானியத்தைப் பெறுவதற்குத் தகுதி பெறுவதற்கு அங்குள்ள பணியாளர்களின் எண்ணிக்கை தடையாக இருக்கமாட்டாது. ஒரு பணியாளராக இருந்தாலும், 1000 பணியாளர்களாக இருந்தாலும் வேலைவாய்ப்பைப் பாதுகாத்து ஆதரவளிப்பதற்கு இந்த மானியத் திட்டம் உதவியளிக்கும்.
  • இலாப நோக்கற்ற நிறுவனங்கள், தொண்டு அமைப்புக்கள், சிறிய மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள் அனைத்தும் இந்த மானியத்தைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கனடா அவசர சம்பள மானியம் (Canada Emergency Wage Subsidy) மூலம் பின்வருவன கிடைக்கும்:

  • கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் பணியாளர்கள் தொடர்ந்தும் பணி புரிந்தால், அவர்கள் சம்பளமாகப் பெறும் முதல் 58,700 டொலரின் 75 சதவீதம் வரையான பணத்தை அரசு வழங்கும். வாரமொன்றுக்கு 847 டொலர் வரையான பணம் வழங்கப்படும்.
  • மார்ச் 15 ஆந் திகதியில் இருந்து இந்த மானியம் வழங்கப்படும்.

கடந்த சில நாட்களில் அறிவிக்கப்பட்ட அவசர நடவடிக்கைகள், அனைவருக்கும் ஆதரவளித்து கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்ட அவசர நடவடிக்கைகள் பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ளவர்கள் கோவிட்-19 காரணமான பாதிப்பை எதிர் கொள்வதற்கு உதவியளித்துப் பலமான எதிர்காலம் ஒன்றுக்கான தயார்படுத்தலை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய மூன்று அம்சத்திட்டம் ஒன்றில் அடங்குகின்றன.

  • கனடா அவசர சம்பள மானியம் (Canada Emergency Wage Subsidy), வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு (Canada Emergency Response Benefit (CERB)) வேலை வாய்ப்பை இழந்தோருக்கு உதவியளிக்கிறது.
  • உத்தரவாதமளிக்கப்பட்ட கடன்களை இலகுவாகப் பெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்து அளவுகளையும் உடைய வணிக நிறுவனங்கள் கடன்களைப் பெற்றுக் கொள்ள உதவியாக இருக்கிறது.

நிதியமைச்சர் பில்மோர்னோ (Bill Morneau), சிறு வணிகத்துறை அமைச்சர் மேரிஇங்(Mary Ng) ஆகியோர் இந்தத் திட்டத்தின் விபரங்களை விளக்கும் ஆவணங்களை வழங்குவார்கள்.

ஏற்படக்கூடிய அனைத்துச் சூழ் நிலைகளிலும் நடவடிக்கைகளை எடுத்துக் கனடியர்களுக்கு உதவியளிப்பதற்கு அரசு தயாராக இருப்பதாகப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்தார்.

  • கோவிட்-19 இற்கு எதிரான போராட்டத்தில் சமூகத்திற்கு உதவியளிப்பதற்குக் கனடிய பாதுகாப்புப் படையினர் கடந்த சில வாரங்களாக தயாராகிவருகிறார்கள்.
  • மாகாணங்களோ, பிராந்தியங்களோ நடவடிக்கை எடுக்குமாறு இன்றுவரை சமஷ்டி அரசைக் கோரவில்லை. ஆனால், இந்த நிலை மாறினால் உதவியளிப்பதற்குப் பாதுகாப்புப் படையினர் தயாராக இருப்பார்கள்.
  • மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செல்வது, நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெள்ளம் அல்லது காட்டுத் தீ காலப் பகுதியில் வீடுகளைப் பாதுகாப்பது அல்லது பொதுவான அவசர கால தயார் நிலையைப் பேணுவது போன்ற உதவிகளைப் பாதுகாப்புப் படையினர் வழங்கக் கூடியதாக இருக்கும்.

கனடிய பாதுகாப்புப் படையினரின் பணியையும், அவர்களது ஈடுபாட்டையும் பாராட்டிய பிரதமர், அவசர நடவடிக்கைப் பணியாளர்கள், மருத்துவத் துறையினர், பராமரிப்புப் பணியாளர்கள், விவசாயிகள், வழங்கல் வலையமைப்பில் பணியாற்றுவொர் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Updated Emergency Measures by the Canadian Federal Government on March 30th

Prime Minister Justin Trudeau highlighted the following updates today (Monday) , as Canada continues to address the COVID-19 pandemic: On March 27th, the Canadian government announced a wage subsidy of up to 75% to businesses affected by COVID-19. Today the Prime Minister provided further information about qualifying for this subsidy – the Canada Emergency Wage Subsidy:

  • To qualify, business revenues should have decreased by at least 30% because of COVID-19.
  • The number of employees of the business does not impact the eligibility of the business.Whether it is 1 employee or 1000 this subsidy program is designed to protect and support the jobs.
  • Non-profit organizations and charities, as well companies both big and small will be able to apply for the wage subsidy. For workers impacted by COVID-19, the Canada Emergency Wage Subsidy delivers the following:
  • If workers are still working for a company that has been impacted by COVID-19, the government will cover up to 75% of their salary on the first $ 58,700 that is earned. This means up to $847 a week.
  • The subsidy will be backdated to March 15.

The emergency measures announced over the last few days have been created as a comprehensive 3-point plan to support everyone across the economy weather impacts of COVID-19 and to prepare for a stronger future:

  • The Canada Emergency Wage Subsidy, focuses on protecting jobs.
  • The Canada Emergency Response Benefit, helps those who lose their job
  • And the easy, guaranteed loans for businesses of all sizes, helps businesses access credit.

Minister of Finance, Minister Bill Morneau and Minister of Small Businesses Minister Mary Ngwill be making available the background documents to explain the technical details of this

Prime Minister Justin Trudeau also announced that the government is ready to act and provide help for Canadians in every scenario.

  • Over the last few weeks, the Canadian Armed Forces have been gearing up to support communities fight COVID-19.
  • To date, the federal government has not received any request for action from the provinces or territories. But if that were to change, the Armed Forces would be ready to answer the call.
  • The help the Armed Forces can provide varies from transporting medical supplies or protecting homes during the flood or forest fire season in various parts of the country or general emergency preparedness.

The Prime Minister recognized the work and dedication of all members of Canada’s Armed Forces, and also thanked the work of all first responders, medical professionals, custodial staff, farmers and people who work along the supply chain.

Related posts

ஐந்து மாகாணங்கள், ஒருபிரதேசத்தில் காற்றின் தர எச்சரிக்கை

Lankathas Pathmanathan

வேலை நிறுத்தம் அடுத்த வாரமும் தொடரும்: CUPE உறுதி

Lankathas Pathmanathan

அவசர சிகிச்சைப் பிரிவை மூட வேண்டும் என்பது சவாலான முடிவாகும்: Ontario சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment