தேசியம்
செய்திகள்

COVID-19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

திங்கள் கிழமை (March 23) கனடாவில்  …..

இரண்டாயிரத்தைத் தாண்டியது கனடாவில் COVID-19 வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

கனடாவில் COVID-19 வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளது. Quebec மாகாணத்தில் இதுவரை 628 COVID-19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Ontario மாகாணத்தில் இதுவரை 504 COVID-19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். British Colombia மாகாணத்தில் இதுவரை 472 COVID-19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Alberta மாகாணத்தில் இதுவரை 301 COVID-19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Ontario – Quebec மாகாணங்களில் அத்தியாவசியமற்ற வணிகங்கள்  மூடப்படுகின்றன

COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து அத்தியாவசியமற்ற வணிகங்களையும் மூடுமாறு Ontario மாகாண முதல்வர் Doug Ford கட்டளையிட்டுள்ளார்.  இந்த உத்தரவு நாளை (செவ்வாய்) இரவு 11:59 மணிக்கு ஆரம்பமாகி 14 நாட்களுக்கு தொடரவுள்ளது.  இது நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அத்தியாவசிய, அத்தியாவசியமற்ற வணிகங்களின் பட்டியல் நாளை அரசாங்கத்தால் வெளியிடப்படும் என முதல்வர் Ford  தெரிவித்தார். இந்த அறிவித்தலுக்கு உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான NDP ஆதரவு தெரிவித்துள்ளது. Ontario மாகாணத்தில் திட்டமிட்டபடி April மாதம் 6 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படாது எனவும் முதல்வர் Doug Ford அறிவித்தார். Quebec மாகாணத்திலும் அனைத்து அத்தியாவசியமற்ற வணிகங்களையும் மூடுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.

பிரதமரின் தொடர் வேண்டுகோள்

கனடியர்கள் COVID-19 சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டிய அவசியத்தை பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார். கனடிய அறிவியல் துறையை COVID-19 தடுப்பூசி உருவாக்கத்தில் அணிதிரட்டுவதற்கான புதிய நடவடிக்கைகளையும் பிரதமர் இன்று அறிவித்தார். COVID-19க்கான தடுப்பூசிகள், சிகிச்சையின் வளர்ச்சிக்கும்  உற்பத்திக்கும் தனது அரசாங்கம் 192 மில்லியனை டொலர்களை செலவிடும் என Trudeau  கூறினார். இந்தத் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் அறிவித்தல்களையும் பிரதமர் Trudeau இன்று வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தில் சிறப்பு அமர்வு

 கனடிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வொன்று நாளை நடைபெறவுள்ளது. அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டி 82 பில்லியன் டொலர் நிதி உதவியையும் பொருளாதார ஊக்கத் தொகுப்பின் அம்சங்களையும்  நிறைவேற்றுவதற்காக இந்த அமர்வு நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டின் இறுதிவரை நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் செலவுகளைத் திட்டமிடவும்,  கடன் வாங்கவும், வரிகளை மாற்றவும் அதிகாரம் வழங்கும் சட்டமூலம் ஒன்று நாளை முன்மொழியப்படவுள்ளது. நாளைய அமர்வில்  32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் கலந்துகொள்ள அனைத்து கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன. Liberal அரசாங்கத்தின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், 11 Conservative நாடாளுமன்ற உறுப்பினர்களும் , Bloc Quebecois,  NDP கட்சிகளின் தலா மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும், பசுமைக் கட்சியின் ஒரு  நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்து கொள்வார் இந்த அமர்வில் இந்த நிதி மசோதா அனைத்து நிலைகளிலும் விரைவாகக் தாண்டி  நாள் முடிவில் செனட்டிற்கு அனுப்பப்படும்.

Toronto நகரில் அவசரகால நிலை

COVID-19 பரவுவதைத் தடுக்கும் Toronto நகரத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக அவசரகால நிலையை அறிவிப்பதாக நகர முதல்வர் John Tory அறிவித்துள்ளார். இதன் முலம் உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நகரசபையின் முழு அதிகாரமும் John Toryக்கு வழங்கப்படுகின்றது.

Related posts

கனேடியர்களுக்கு எதிரான ஈரானின் மரண அச்சுறுத்தல் குறித்து கண்காணிக்கின்றோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

உடல்நலக் காரணங்களுக்காகவே இரண்டு கனேடியர்களும் விடுவிக்கப்பட்டனர்: சீனா தகவல் 

Gaya Raja

Conservative கட்சியின் புதிய தலைவரானார் Pierre Poilievre

Lankathas Pathmanathan

Leave a Comment