தேசியம்
செய்திகள்

COVID -19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

வெள்ளிக்கிழமை (March 20) கனடாவில்  …..

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது

கனடாவில் COVID – 19 வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. British Colombia, Ontario மாகாணங்களில் COVID – 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தலா முந்நூறைத் தாண்டியுள்ளது. British Colombia மாகாணத்தில் இன்று மேலும் 77 புதிய COVID – 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Ontario மாகாணத்தில் இன்று மேலும் 60 புதிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Alberta மாகாணத்தில் COVID – 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு நூறை அண்மிக்கின்றது. Alberta மாகாணத்தில் இன்று மேலும் 49 புதிய COVID – 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் ஒருகனடியர் இறந்துள்ளார்

COVID-19 தொடர்பான நோயினால் ஜப்பானில் ஒரு கனடியர் இறந்துள்ளார். கனடிய வெளியுறவு அமைச்சர் Francois – Philippe Champagne இன்று இதனை உறுதிபடுத்தினார். மரணமடைந்தவர் கடந்த மாதம் வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட Diamond Princess பயணக் கப்பலில் பயணித்தவர் என உலகளாவிய விவகாரங்களுக்கான கனடிய அமைச்சு தெரிவித்தது. பலியானவர்களின் குடும்பத்திற்கு அரசாங்கம் தூதரக உதவிகளை செய்து வருகின்றது.

பிரதமரின் இன்றைய அறிவித்தல்கள்

COVID – 19 தொற்று நோயிக்கு எதிரான நகர்வுக்கு தொழிற் துறையைத் தயார்படுத்தும் திட்டத்தை கனடிய அரசாங்கம் செயற்படுத்தவுள்ளது. இன்று நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார். அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையிலான எல்லை அத்தியாவசிய மற்ற பயணத்திற்கு இன்று நள்ளிரவுடன் மூடப்படுவதாகவும் Trudeau தெரிவித்தார். இருந்த போதிலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வணிகத்தை இது பாதிக்காது என பிரதமர் கூறினார். கனடிய எல்லையை வந்தடையும் ஒழுங்கற்ற அகதி உரிமை கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் பிரதமர் Trudeau கூறினார். நாடு திரும்ப முற்படும் கனடியர்களை மீண்டும் அழைத்துவருவதற்கு விமானப் போக்குவரத்துத் தொழிற் துறையுடன் கனடிய அரசு கலந்துரையாடி வருவதாக கூறிய பிரதமர் இதன் பயனாக, மொறோக் கோவில் இருந்து ஒரு விமானம் இந்த வார இறுதியில் கனடாவுக்கு பயணமாகும் எனத் தெரிவித்தார். கடந்த வாரம் மாத்திரம் ஏறத்தாழ 500,000 விண்ணப்பங்கள் வேலை வாய்ப்பு காப்பீட்டிற்காக தாக்கல் செய்யப்பட்டதாக பிரதமர் Trudeau கூறினார்.

மாணவர்களுக்கான இணைய முறை கல்வி

COVID-19 தொற்று நோய் பரவலின் மத்தியில் வீட்டில் உள்ள மாணவர்களுக்கான இணைய முறை கற்றல் திட்டத்தை Ontario அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று, முதல்வர் Doug Ford, கல்வி அமைச்சர் Stephen Lecce ஆகியோர் இணைந்து இந்த அறிவித்தலை வெளியிட்டனர். Ontario ஆசிரியர்கள் கல்லூரி கல்வியாளர்களால் தயாரிக்கப் பட்ட மழலையர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான கல்வித் திட்டமாக இது அமைத்துள்ளது.  9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு அத்தியாவசிய கல்வித் திட்டத்தை இந்த வலைத் தளம் வழங்கும் என மாகாண கல்வி அமைச்சர் கூறினார்.

Manitoba மாகாணத்தில் அவசர கால நிலை

Manitoba மாகாணத்தில் அவசர கால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது. COVID – 19 தொற்று நோய்க்கு மத்தியில் இந்த அறிவித் தலை முதல்வர் Brian Pallister மேற்கொண்டார். அடுத்த 30 தினங்களுக்கு இந்த அறிவித்தல் நடை முறையில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

வெளி நாடுகளுக்கான பொருளாதார உதவிகள்

COVID – 19 பரவலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக வெளி நாடுகளுக்கு பொருளாதார உதவிகளை கனடிய அரசாங்கம் வழங்கவுள்ளது. சர்வதேச அபிவிருத்தி அமைச்சர்  Karina Gould இந்தத் தகவலை வெளியிட்டார். அகதிகள் முகாம்களிலும், வளரும் நாடுகளிலும் COVID – 19 பரவுவதை எதிர் கொள்ள கனடிய அரசாங்கம் விரைவில் மில்லியன் டொலர்கள் வெளிநாட்டு உதவிகளை வழங்கவுள்ளது. கடந்த வாரம், கனடிய அரசாங்கம் அறிவித்த 1 பில்லியன் டொலர்கள் கொரோனா வைரஸ் மறு மொழி திட்டத்தின் ஒரு பகுதியாக உலக சுகாதார அமைப்புக்கு 50 மில்லியன் டொலர்களை அரசாங்கம் வழங்கவுள்ளது.

பணி நீக்கம் செய்யும் Air Canada

COVID – 19 தொற்று நோய்க்கு மத்தியில் Air Canada  5,000க்கும் மேற்பட்ட விமான உதவியாளர்களை பணி நீக்கம் செய்கிறது.  April மாதத்திற்குள் இந்தப் பணி நீக்கம் நடைமுறைக்கு வரும் என Air Canada ஊழியர்கள் பங்கேற்கும் கனடிய பொது ஊழியர்கள் ஒன்றியம் கூறியுள்ளது. இந்தப் பணி நீக்கங்கள் தற்காலிகமானவை எனவும், மீண்டும் விமான நிறுவனம் வழமையான செயல்பாடுகளை ஆரம்பித்தால் ஊழியர்கள் கடமைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் Air Canada தெரிவிக்கின்றது. 31ஆம் திகதிக்குள் தனது பெரும்பாலான சர்வதேச விமான சேவைகளை படிப்படியாக நிறுத்துவதாக Air Canada நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.

Related posts

மற்றொரு முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை மத்திய அரசாங்கத்துடன் CSIS பகிர்ந்து கொள்ள வேண்டும்

Lankathas Pathmanathan

கனடாவில் 500க்கும் குறைவான தொற்றுக்கள் திங்களன்று பதிவு

Gaya Raja

Leave a Comment