அமெரிக்கா உலக வர்த்தகத்தை வழி நடத்தவில்லை என்றால், கனடா அதை செய்யும் என கனடிய பிரதமர் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதியின் புதிய வரி விதிப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கருத்தை கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்தார்.
CUSMA உடன் இணங்காத அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் கனடா 25 சதவீத வரி கட்டணத்தை அறிமுகப்படுத்துகிறது.
பிரதமர் Mark Carney வியாழக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கனடா மீது விதித்த வரி விதிப்புக்கு இந்த அறிவித்தல ஒரு எதிர் நடவடிக்கையாகும்.
முன்னர் விதிக்கப்பட்ட பல கனடிய பொருட்கள் மீதான கட்டணங்கள் தொடந்தும் நடைமுறையில் உள்ள நிலையில், கனடாவின் பதில் எதிர் நடவடிக்கைகளும் நடைமுறையில் உள்ளன.