கனடிய பொதுத் தேர்தல் பிரச்சாரம் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மீது கவனத்தை திருப்புகிறது.
Donald Trump மீண்டும் வரிவிதிப்புகள் அறிவிப்புகளை புதன்கிழமை (02) வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பின் மத்தியில் தேர்தல் கவனம் அவர் மீது திரும்பியுள்ளது.
செவ்வாய்கிழமை (01) Manitoba-வில் ஒரு நாள் பிரச்சாரத்தின் பின்னர், Liberal தலைவர் Mark Carney தலைநகர் Ottawa திரும்பினார்.
அவர் அமெரிக்க வரி கட்டண அறிவிப்புக்கு முன்னதாக புதன்கிழமை Ottawa-வில் சந்திப்புகளை நடத்த உள்ளார்.
ஏனைய கட்சி தலைவர்களின் 11-ஆவது நாள் பிரச்சார திட்டங்கள் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.
புதன்கிழமை அறிவிக்கப்படும் அமெரிக்க வரிகளை கனடா எதிர்கொள்ளும் என Mark Carney ஏற்கனவே கூறியுள்ளார்.
அமெரிக்க வரி விதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து Mark Carney விலகிச் செல்வது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த வாரம், Donald Trump வாகன இறக்குமதி வரி விதிப்புகளை அறிவித்த பின்னர், Quebec மாகாணத்தில் முன்னெடுத்த அவரது பிரச்சார நிகழ்வுகளை Mark Carney இரத்து செய்துவிட்டு Ottawa திரும்பினார்.