Ontario மாகாணத்தில் 200,000-க்கும் மேற்பட்டோர் மின்சாரத்தை இழந்த நிலையில் உள்ளனர்.
Ontario மாகாணத்தில் நடைமுறையில் இருந்த உறைபனி மழை எச்சரிக்கை முடிவுக்கு வந்த நிலையில் 200,000-க்கும் மேற்பட்டோர் மின்சாரத்தை இழந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் முழுவதும் உறைபனி மழை மழையாக மாறும் என சுற்றுச்சூழல் கனடா அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீட்டெடுக்க ஊழியர்கள் முழுமையாக பணியாற்றி ஈடுபட்டுள்ளதாக Hydro One அதிகாரிகள் தெரிவித்தனர்.
218,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்பை வலியுறுத்திய அதிகாரிகள், அறுந்து கிடக்கும் மின் கம்பிகள், மரங்கள், சேதமடைந்த மின் சாதனங்களில் இருந்து தூர விலகி இருக்குமாறு வாடிக்கையாளர்களை கோரினர்.