பிரதான கட்சி தலைவர்கள் விவாத எண்ணத்தை பிரெஞ்சு ஒளிபரப்பு நிலையம் கைவிட்டது.
Québec ஒளிபரப்பு நிறுவனமான TVA , Face-à-Face என அழைக்கப்படும் நேருக்கு நேர் விவாதத்தை நடத்துவதற்கான எண்ணத்தை கைவிட்டுள்ளது.
இந்த விவாதத்தில் பங்கேற்க Liberal கட்சி மறுத்ததன் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக TVA ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
Mark Carney இந்த இரண்டாவது பிரெஞ்சு மொழி தலைவர்கள் விவாதத்தில் பங்கேற்க மாட்டார் என்பதை Liberal பிரச்சாரத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
ஆங்கிலம், பிரெஞ்சு மொழியில் இரண்டு உத்தியோகபூர்வ தேர்தல் விவாதங்கள், நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன.
பிரெஞ்சு மொழியில் ஒன்று, ஆங்கிலத்தில் ஒன்று என முறையே April 16 , 17 ஆகிய திகதிகளில் இந்த விவாதங்கள் நடைபெறவுள்ளன.
அந்த விவாதங்களை தலைவர்கள் விவாத ஆணையம் என்ற சுயாதீன அமைப்பு நடத்துகிறது.
கூடுதலாக ஒரு விவாதத்தை நடத்த TVA திட்டமிட்டிருந்தது.
TVA விவாதத்தில் பங்கேற்பதற்காக தயாரிப்பு செலவுகளை ஈடு செய்ய நான்கு முக்கிய கட்சிகளும் தலா 75,000 டொலர் பங்களிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.
Conservatives, NDP, Bloc Québécois ஆகிய கட்சிகள் அனைத்தும் TVA விவாதத்தில் பங்கேற்க கட்டணம் செலுத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தன.
இந்த விவாதத்தில் பங்கேற்க Liberal தலைவர் Mark Carney மறுத்ததற்காக Conservative தலைவர் Pierre Poilievre, Bloc Québécois தலைவர் Yves-Francois Blanchet ஆகியோர் தமது கண்டனங்களை பதிவு செய்தனர்.
Liberal தலைவரின் முடிவு காரணமாக பிரெஞ்சு விவாதம் இரத்து செய்யப்பட்டிருப்பது, Quebec-கை அவமதிப்பதாகும் என NDP தலைவர் Jagmeet Singh கூறினார்.