கனடியர்களை பிரிப்பதன் மூலம் வெற்றிபெற வேண்டும் என்பதே Pierre Poilievre-ரின் திட்டம் என Liberal தலைவர் Mark Carney தெரிவித்தார்.
அதேபோல் அமெரிக்கா ஜனாதிபதியின் திட்டம் “பிரித்தாள்வது” என அவர் கூறினார்.
Mark Carney ஞாயிற்றுக்கிழமை (23) பிற்பகல் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
அதன் பின்னர் முதல் முழு நாள் பிரச்சாரம் திங்கட்கிழமை (24) நடைபெற்றது.
Newfoundland மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய Mark Carney, கனடாவின் தேர்தலை அமெரிக்க ஜனாதிபதி உன்னிப்பாக கவனித்து வருகிறார் என தான் நம்புவதாகவும் கூறினார்.
கனடாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் கனடிய இறையாண்மையை மதிக்க வேண்டும் எனவும் Mark Carney வலியுறுத்தினார்.
“பரந்த பொருளாதார, பாதுகாப்பு கூட்டாண்மை குறித்து அமெரிக்கர்களுடன் விரிவான விவாதம் நடத்த வேண்டும்” என அவர் கூறினார்.
கனடியர்களின் ஆணையை யார் பெறுகிறார்கள் என்பதை பார்க்க தேர்தல் முடிவுக்காக ஜனாதிபதி காத்திருக்கிறார் என தான் நம்புவதாக Mark Carney கூறினார்.
கனடியர்கள் ஒரு புதிய அரசாங்கத்தை April 28 ஆம் திகதி தேர்ந்தெடுக்கவுள்ளனர்.