Liberal, Conservative செல்வந்த கனேடியர்களுக்கு மட்டுமே போராடுவார்கள் என தெரிவிப்பதன் மூலம் தனது தேர்தல் பிரச்சாரத்தை NDP தலைவர் Jagmeet Singh ஆரம்பித்தார்.
கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு April 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (23) வெளியிட்டார்.
தனது பிரதான போட்டியாளர்கள் செல்வந்தர்கள் சக்தி வாய்ந்தவர்களுக்கு சேவையாற்றுவார்கள் என கூறிய Jagmeet Singh சராசரி கனடியர்களின் அவசர தேவைகளை புறக்கணிப்பார்கள் என எச்சரித்துள்ளார்.
அனைத்து கனடியர்களின் சிறந்த நலன்களுக்காகவும் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-க்கு எதிராக போராடுவதற்கு அவர் உறுதியளித்துள்ளார்.
கனடியர்களின் தேர்வு Liberal தலைவர் Mark Carney, Conservative தலைவர் Pierre Poilievre இடையே இருக்கத் தேவையில்லை எனவும் Jagmeet Singhகூறினார்.
Ottawa-வில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த அவர் ஞாயிறு மாலை, Montreal நகரில் ஒரு பேரணியில் கலந்து கொண்டார்