தேசியம்
செய்திகள்

தேர்தல் பிரச்சார மரபிலிருந்து மாறும் Conservative கட்சி!

தேர்தல் பிரச்சாரத்தின் போது Conservative கட்சி தலைவருடன் பயணிக்க நிருபர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கட்சி முடிவெடுத்துள்ளது.
பிரச்சார விமானம் அல்லது பேருந்தில் நிருபர்கள், பத்திரிகையாளர்கள் பயணிப்பதை தடுக்கும் திட்டத்தை இந்த வார ஆரம்பத்தில் Conservative கட்சி அறிவித்தது.
இது வழமையான பிரச்சார கால மரபிலிருந்து ஒரு மாறுபட்ட நகர்வாகும்.
இது பெரும்பாலும் உள்ளூர் அல்லது பிராந்திய நிருபர்கள் தேர்தலின் போது Pierre Poilievre-இன் நிகழ்வுகள், செய்தியாளர் சந்திப்புகளிலும் செய்தி சேகரிப்பிலும் கேள்வி நேரத்திலும் பங்கேற்கும் நிலையை உருவாக்கும்.
இந்த முடிவை கட்சியின் தலைவர் Pierre Poilievre நியாயப்படுத்தினார்.
தன்னுடன் முழுநேரம் செலவு செய்யும் அரசியல் நிருபர்களுக்கு பதிலாக அதிகம் உள்ளூர் நிருபர்களிடம் இருந்து கேள்விகளையும், கருத்துக்களையும், செவிமடுக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் என அவர் தெரிவித்தார்.
இந்த முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்த முடிவின் மூலம் Pierre Poilievre, தன் பொறுப்புக்கூறலை தட்டிக்கழிக்க முயற்சிக்கிறார் என Liberal கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
Pierre Poilievre, சில கேள்விகளுக்கு பதிலளிக்க அச்சப்படுவதில் ஆச்சரியமில்லை” என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார்.
Liberal, NDP, Bloc Québécois கட்சிகள் பத்திரிகையாளர்கள் தங்கள் தலைவர்களுடன் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என ஊடக நிறுவனங்களிடம்  தெரிவித்தன.

Related posts

மருந்துகளின் விலையை குறைக்கும்  புதிய விதிமுறைகளில் தாமதம்

Lankathas Pathmanathan

சில மாகாணங்களில் புதிய கட்டுப்பாடுகள் – சில மாகாணங் களில் கட்டுப்பாடுகள் தளர்வு!

Gaya Raja

தடுப்பூசியை பெற்றுக் கொண்ட Ontario சுகாதார அமைச்சர்

Gaya Raja

Leave a Comment