கனடாவின் புதிய பிரதமராக Mark Carney எதிர்வரும் நாட்களில் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கனடாவின் 24-வது பிரதமராக Mark Carney வெள்ளிக்கிழமை (14) பதவியேற்றார்.
பிரதமராக Mark Carney தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பிக்கிறார்.
வரலாற்று ரீதியான உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தகம், பாதுகாப்பு குறித்து உரையாடவும் பிரெஞ்சு ஜனாதிபதி Emmanuel Macron, இங்கிலாந்து பிரதமர் Keir Starmer ஆகியோரால் அழைக்கப்பட்டதாக Carney தெரிவித்தார்.
இந்த பயணத்தின் நோக்கம் கனடாவின் இரண்டு நெருக்கமான, நீண்டகால பொருளாதார, பாதுகாப்பு கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதாகும் என கனடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவர் செவ்வாய்க்கிழமை (18) மீண்டும் நாடு திரும்புவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என Mark Carney தெரிவித்தார்.
இருப்பினும், “பொருத்தமான தருணத்தில்” அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-புடன் பேச எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.