Mark Carney வெள்ளிக்கிழமை (14) கனடாவின் புதிய பிரதமராக உத்தியோக பூர்வமாக பதவியேற்றார்.
கனடாவின் 23-வது பிரதமர் பதவியில் இருந்து Justin Trudeau உத்தியோக பூர்வமாக விலகிய நிலையில் 24 ஆவது பிரதமராக Mark Carney பதவியேற்றார்.
Liberal கட்சியின் தலைவராக Mark Carney கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவானார்.
இந்த நிலையில் அவர், பிரதமர் பதவியை வெள்ளிக்கிழமை ஏற்றார்.
இந்த பதவியேற்பு வைபவம் வெள்ளி காலை 11 மணியளவில் ஆளுநர் நாயகம் Mary Simon முன்னிலையில், அவரது உத்தியோகபூர்வ வாசல் தலமான Rideau Hall இல் நடைபெற்றது.