கனடாவின் 23-வது பிரதமர் பதவியில் இருந்து Justin Trudeau உத்தியோக பூர்வமாக விலகினார்.
24-ஆவது பிரதமராக Mark Carney பதவி ஏற்பதற்கு முன்னதாக Justin Trudeau தனது பதவியில் இருந்து வெள்ளிக்கிழமை (14) விலகினார்.
ஏறக்குறைய ஒரு தசாப்த காலம் Justin Trudeau ஆட்சியில் இருந்தார்.
Liberal கட்சியின் தலைமையில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau கடந்த January மாதம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆளுநர் நாயகம் Mary Simon முன்னிலையில் தனது பதவியில் இருந்து விலகினார்.
December 25, 1971 பிறந்த அவர் Liberal கட்சியின் தலைவராக 2013 முதல் 2025 வரை பதவி வகித்தவர்.
Justin Trudeau, கனடிய பிரதமராக 2015 முதல் 2025 வரை பதவி வகித்தவர்.
இவர் 2008 முதல் Québec மாகாணத்தின் Papineau தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.