தேசியம்
செய்திகள்

புதிய பிரதமரானார் Mark Carney

கனடாவின் புதிய பிரதமராக Mark Carney தெரிவு செய்யப்பட்டார்.
Liberal கட்சியின் புதிய தலைவரும், கனடாவின் புதிய பிரதமரும் ஞாயிற்றுக்கிழமை (9) தெரிவானார்.
86 சதவீத வாக்குகளை பெற்று புதிய பிரதமராக Mark Carney தெரிவு செய்யப்பட்டார்.
Mark Carney இப்பொழுது உத்தியோகபூர்வமாக கனடாவின் Liberal கட்சி தலைவராக இருந்தாலும், அவர் இன்னும் உத்தியோகபூர்வமாக பிரதமராக பதவி ஏற்கவில்லை.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau கடந்த January மாதம் அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்தது.
151,899 Liberal உறுப்பினர்கள் புதிய பிரதமரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் வாக்களித்தனர் என Liberal கட்சி அறிவித்தது.
Liberal கட்சியின் தலைமை பதவியை வெற்றி கொள்வதன் மூலம் கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படும் முயற்சியில் Mark Carney, Chrystia Freeland, Karina Gould, Frank Baylis ஆகியோர் ஈடுபட்டனர்.
இந்த நிலையில்  புதிய Liberal கட்சி தலைவராகவும், கனடாவின் புதிய பிரதமரும் தெரிவான Mark Carney, Justin Trudeauவுக்கு பதிலாக கனடாவின் தலைமை பதவியை ஏற்கிறார்.

Related posts

Derek Sloan கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா? – நாளை வாக்களிப்பு

Lankathas Pathmanathan

இஸ்ரேலில் இரண்டாவது கனடியர் பலி

Lankathas Pathmanathan

கனடாவில் வீடு விற்பனை ஐந்தாவது மாதம் வீழ்ச்சியடைந்தது!

Lankathas Pathmanathan

Leave a Comment