Mexicoவில் இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.
Mexicoவின் மேற்கில் உள்ள Sabalo Countryயில் ஒரு வீட்டிற்குள் இரண்டு கனடியர்கள் சடலமாக மீட்கப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு கனடியர்களின் மரணத்திற்கான காரணத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.
இதில் மற்றொருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Mexicoவில் இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிந்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
ஆனால் தனியுரிமை பாதுகாப்பு காரணமாக கொல்லப்பட்டவர்கள் குறித்த மேலதிக விபரங்களை வெளியிட அமைச்சு மறுத்துள்ளது.