மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் April 1 முதல் அதிகரிக்க உள்ளது.
இது குறித்த அறிவித்தலை மத்திய அரசாங்கம் வெளியிட்டது.
இதன் மூலம் குறைந்தபட்ச ஊதியம், ஒரு மணிநேரத்திற்கு $17.75 வரை அதிகரிக்கவுள்ளது.
இது தற்போதைய மத்திய குறைந்தபட்ச ஊதியத்தில் இருந்து 2.4 சதவீதம் அதிகமாகும்.
இந்த அதிகரிப்பு தனியார் துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஊதியம் ஆண்டுக்கு ஆண்டு வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்யும் என் கூறப்படுகிறது.