Quebec மாகாண அமைச்சர் Éric Caire பதவி விலகினார்.
SAAQclic ஊழல் மத்தியில் இந்த பதவி விலகல் அறிவித்தல் வெளியானது.
Cyber பாதுகாப்பு, Digital தொழில்நுட்ப அமைச்சர் Éric Caire வியாழக்கிழமை (27) சமூக ஊடகங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
வாகன காப்பீடு வாரியத்தின் இணையத்தளம் தொடர்பாக குறைந்தது அரை பில்லியன் டாலர் செலவு தொடர்பான ஊழலுக்கு மத்தியில் அவர் பதவி விலகியுள்ளார்.
குறிப்பிட்ட சர்ச்சை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என அவர் தெரிவித்தார்.
Quebecகின் Coalition Avenir அரசாங்கத்தில் நீண்டகாலமாக Éric Caire அமைச்சராக பணியாற்றினார்.
இவரது பதவிக்கான புதிய அமைச்சர் அடுத்த சில நாட்களில் நியமிக்கப்படுவார் என Quebec முதல்வர் François Legault கூறினார்.