இருபதுக்கும் மேற்பட்ட மோசடிக் குற்றங்களுக்காக Durham காவல்துறையினரால் தமிழர் ஒருவர் தேடப்படுகிறார் .
தேடப்படும் சந்தேக நபர் Markham நகரைச் சேர்ந்த 32 வயதான தனுசான் உருத்திரமூர்த்தி என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர் Bowmanville குடியிருப்பாளர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியான தொலைபேசி வங்கி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
அவரை அடையாளம் காண உதவி கோரி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்து பல மாதங்களின் பின்னர் அவரது அடையாளத்தை காவல்துறையினர் வெளியிட்டனர்.
இவர் September 2024 முதல் Bowmanville குடியிருப்பாளர்களை ஏமாற்ற ஆரம்பித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
இவர் 21 குற்றச்சாட்டுகளில் தேடப்படும் குற்றவாளி என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.