February 25, 2025
தேசியம்
செய்திகள்

உக்ரைனின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உத்தரவாதம் அளிக்கும் என கனடா நம்பிக்கை?

உக்ரைனின் பாதுகாப்புக்கு அமெரிக்கா ஜனாதிபதி உத்தரவாதம் அளிப்பார் என கனடிய வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்த அமெரிக்க கொள்கையை Donald Trump தொடர்ந்து மாற்றி அமைத்து வரும் நிலையில் இந்த கருத்தை Melanie Joly தெரிவித்தார்.

உக்ரைனின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும்  “குழுவில்” அமெரிக்காவையும் இணைக்க முடியும் என தான் இன்னும் நம்புவதாக கனடிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் புரிதலை எமது நட்பு நாடுகளுடனும் கொண்டிருக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.

தனது முயற்சிகளில் அமெரிக்கர்களை இந்த விடயத்தில் நட்பு நாடுகளின் பக்கம் கொண்டு வர முடியும் என்பதையும் உறுதிப்படுத்துவது பிரதானமானது என Melanie Joly தெரிவித்தார்.

பிரதமர் Justin Trudeau உட்பட உலகத் தலைவர்கள் திங்களன்று உக்ரைனில் கூடி ரஷ்யாவின் உக்ரைன் மீதான போரின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அந்த நாட்டிற்கு ஆதரவை தெரிவித்துள்ள நிலையில் இந்த கருத்துக்கள் வெளியாகின.

உக்ரேன் குறித்த Donald Trump நிர்வாகத்தின் தற்போதைய நிலைப்பாட்டுடன் கனடா உடன்படவில்லை என்பதை ஒரு தொலைககாட்சி செவ்வியில் Melanie Joly ஒப்புக் கொண்டார்.

Related posts

உக்ரைனுக்கு ஆதரவான ஒற்றுமை பேரணியில் பங்கேற்ற கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

தேர்தல் நடவடிக்கைகளுக்கு COVID தடையாக இருக்காது: கனடிய தேர்தல் திணைக்களம் உறுதி

Gaya Raja

மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் கல்லறைகள் கண்டுபிடிப்பு!

Gaya Raja

Leave a Comment