Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் செயல்பாடுகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
80 பேருடன் பயணித்த Delta விமானம், Toronto Pearson சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் மொத்தம் 18 பேர் காயமடைந்தனர்.
திங்கட்கிழமை (17) பிற்பகல் நிகழ்ந்த இந்த விபத்தை தொடர்ந்து பாதிப்புகளை எதிர்கொண்ட விமான நிலைய செயல்பாடுகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்த விமான விபத்தில் 21 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் சிகிச்சையின் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தின் விளைவாக பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாயின.
சம்பவ இடத்திலேயே நடத்தப்பட்ட விசாரணை தொடர்ந்து, விமானத்தின் சிதைவுகள் வியாழக்கிழமை (20) அதிகாலை ஓடுபாதையில் இருந்து அகற்றப்பட்டன.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் 30,000 டாலர் வழங்க Delta விமான சேவை முன்வந்துள்ளது.
விமானத்தில் பயணம் செய்த கனடிய தம்பதியினர் உட்பட நால்வர் இதுவரை டெல்டா விமான சேவைக்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.