உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கனடாவின் பல்வேறு நகரங்களில் பேரணிகள் நடைபெறுகின்றன.
February 24, 2022 அன்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது.
இதன் மூன்றாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கனடா முழுவதும் பல நகரங்கள் பேரணிகளை நடத்துகின்றன.
இந்தப் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் உலகளாவிய நடவடிக்கை தினத்தின் ஒரு பகுதியாக கனடா முழுவதும் பல நகரங்கள் இந்த வார இறுதியில் பேரணிகளை நடத்தின.
நகர அரங்குகள், அருங்காட்சியகங்கள், சமூக மையங்களில் இந்த பேரணிகள் நடைபெற்றன.
Halifax, Montreal, Ottawa, Toronto, Winnipeg, Calgary,Vancouver உள்ளிட்ட நகரங்களில் பேரணிகள் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றன.
Winnipeg நகரில் நடைபெற்ற பேரணியில் Manitoba முதல்வர் Wab Kinew கலந்து கொண்டார்.
நாடளாவிய ரீதியில் சில நகரங்களில் சனிக்கிழமை (22) பேரணிகள் ஆரம்பித்தன.
வேறு சில நகரங்களில் திங்கட்கிழமை (24) பேரணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் அகதிகளாக கனடாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.