British Colombia மாகாணத்தின் தெற்கு பகுதியை மிதமான நிலநடுக்கம் தாக்கியது.
வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் பதிவான இந்த நிலநடுக்கத்தில் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது.
இது Vancouver பகுதி, Vancouver தீவு முழுவதும் குறிப்பிடத்தக்க அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இதன் போது தங்கள் கால்களுக்குக் கீழ் நிலம் நகர்வதை தங்களால் உணர முடிந்தது என குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் விளைவாக எதிர்பார்க்கப்படும் சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.