ஒன்றுபட்ட, வளமான தேசத்தை உருவாக்க Conservative தலைவர் Pierre Poilievre உறுதியளித்தார்.
Ottawaவில் சனிக்கிழமை (15) நடைபெற்ற “Canada First ” பேரணியில் உரையாற்றிய போது Pierre Poilievre இந்த உறுதியை வழங்கியிருந்தார்.
வரிவிதிப்புகள் மூலம் கனடாவின் பொருளாதாரத்தின் மீது அமெரிக்கா முன்னெடுக்கும் “ஒரு தூண்டுதலற்ற தாக்குதலின்” விளைவுகளை தனது உரையில் Pierre Poilievre விவரித்தார்.
தனது கட்சி ஆட்சி அமைத்தால், அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு பதிலடி வழங்கப்படும் என தனது உரையில் அவர் வலியுறுத்தினார்.
நாங்கள் ஒருபோதும் அமெரிக்காவின் 51வது மாநிலமாக இருக்க மாட்டோம் என வலியுறுத்திய Pierre Poilievre, எங்கள் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க நாங்கள் எந்த சுமையும் தாங்குவோம், எந்த விலையும் கொடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.