Mark Carneyயின் Liberal கட்சி தலைமை பிரச்சாரத்திற்கு 1.9 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் நிலை உள்ளது.
இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்களில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் Mark Carney முன்னணி வேட்பாளராக கருதப்படுகிறார்.
இந்த நிலையில் அவரது பிரச்சாரக் குழு இதுவரை 1.9 மில்லியன் டாலர் நிதி திரட்டி உள்ளதாக தெரியவருகிறது.
இதுவரை 11,000க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 1.9 மில்லியன் டாலருக்கு அதிகமான நன்கொடைகளை திரட்டியுள்ளதாக அவரது தலைமை பிரச்சாரத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
Liberal தலைமைப் போட்டிக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளன.
Liberal கட்சி March 9 ஆம் திகதி புதிய தலைவரையும், கனடாவின் அடுத்த பிரதமரையும் தேர்ந்தெடுக்கும்.
அடுத்த வாரம் அனைத்து வேட்பாளர்களின் நிதி திரட்டும் முதல் தொகுதி எண்களை கனடிய தேர்தல் திணைக்களம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.