Liberal தலைமைப் பதவி போட்டி வேட்பாளர்கள் விவாதங்களுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் நடைபெறுகிறது.
இந்த தலைமைப் பதவிக்கான போட்டியில் ஐந்து வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தலைமை வேட்பாளர்கள் ஆங்கிலம், பிரஞ்சு என இரண்டு விவாதங்களில் ஒருவரை ஒருவர் எதிர்கொள்கின்றனர்.
இந்த விவாதங்கள் Montreal நகரில் February 24, 25 ஆம் திகதிகளில் நடைபெறும் என Liberal கட்சி அறிவித்துள்ளது.
Liberal கட்சியின் அடுத்த தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமரும் March 9 தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.